நானிருக்க பயமேன்?- அரவங்களை அரவணைக்கும் கஜேந்திரன்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பாம்புகளைப் பற்றிய சாமானியர்களின் பயம் நியாயமானது. வருடந்தோறும் பாம்புக் கடிக்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. ஆனால், பாம்புகள் எப்போதும் நமக்குக் கெடுதல் செய்பவை என்ற தவறான கண்ணோட்
டமே நம்மிடம் இருக்கிறது. அதனால்தான், பாம்பு கண்ணில் பட்டாலே அதை அடித்துப் பரலோகத்துக்கு அனுப்பிவிடுகிறோம். “இதற்கெல்லாம் விழிப்புணர்வின்மைதான் முக்கியக் காரணம்” என்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த கஜேந்திரன். பாம்பு
களிடமிருந்து மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்களிடமிருந்து பாம்புகளையும் மீட்கும் மகத்தான பணியைச் செய்து
வருகிறார் இவர்.

நாகர்கோவிலை அடுத்த வடக்குசூரங்குடியில் இருக்கிறது கஜேந்திரனின் வீடு. நாகர்கோவிலில் ஆட்டோமொபைல் பெயின்டிங் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். நகர்ப் பகுதியிலேயே வாழ்ந்துவந்தாலும், பாம்புகளைச் சர்வசாதாரணமாக எதிர்கொள்கிறார். சுற்றுவட்டாரத்தில் வீடுகளுக்குள் பாம்பு வந்து விட்டால் கஜேந்திரனுக்கு ‘கால்’ போட்டுவிடுகிறார்கள்!

அவரைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றபோது பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. காகம் முதல் பாம்பு வரை சகல ஜீவராசிகளும் சகஜமாக அவரது வீட்டுக்கு வருகின்றன. தூரத்தில் அமர்ந்திருக்கும் காகத்தைப் பார்த்து கஜேந்திரன் விசில் அடித்து சமிக்ஞை செய்ய, உடனே பறந்துவந்து அவரது கைகளில் அமர்ந்துகொள்கிறது.

x