சாய்க்கப்பட்ட சாத்தனூர் புலி!- காத்திருந்து காரியம் முடித்த பாஜக


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

“வேட்டைக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லையா... சோதனை நடத்த அதிகாரிகளை அனுப்பு எனும் தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது பாஜக” – 2017-ல், கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு இது.

இன்றைக்கு அந்தச் சோதனைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சிவக்குமார். இதைக் கண்டித்து கர்நாடகக் காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள் வன்முறை வடிவம் எடுத்து ஒட்டுமொத்த அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பாஜகவின் அசகாய அஸ்திரங்களுக்கு நடுவே கட்சியைக் காபந்து பண்ணுவதில் வல்லவர் என்று பெயரெடுத்த சிவக்குமாரின் கதை பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாதது.

யார் இந்த சிவக்குமார்?

x