தொகுப்பு: தேவா
தமிழிசைக்கு தெலங்கானா ஆளுநர் பதவி கொடுத்த விவகாரம் கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. இதுபற்றி, ‘என்ன ஒரு ஆச்சரியம்’ என்று சிலர் முனகிக்கொண்டிருக்க, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்யா’ என்பதுபோல, விமர்சனங்களையும் கிண்டல்களையும் எதிர்கொண்டு பொறுமையின் சிகரம் எனப் பெயர் வாங்கிய தமிழிசைக்கு இதைக்கூட செய்யவில்லை எனில் பாஜக ஆட்சியிலிருந்து என்ன பிரயோஜனம் என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். தமிழிசை ஒருபக்கம் கோட்டை கட்ட கற்களைக் கொடுத்த மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்க, மறுபக்கம் விண்வெளி வீரர் வீடியோ வைரலாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஏதோ நிலவின் மேற்பரப்பில் நடந்துகொண்டிருப்பது போலவே எல்லோரும் நம்பிவிட, திடீரென்று ஒரு ஆட்டோ கடந்துபோக கேமராவைத் திருப்பினால் அது பெங்களூருவில் இருக்கும் ஒரு சாலை. குண்டும் குழியுமான சாலையின் நிலையை விமர்சிக்க இப்படி வித்தியாசமாக யோசித்த அந்த விண்வெளி வீரர் வீடியோ குழுவுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்தது. வீடியோ வைரலானதும் அடுத்த நாளே சாலையைச் சீரமைக்க உத்தரவும் போட்டாகிவிட்டது. ஒரு சாலையைச் சீரமைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா?
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும். - செல்லூர் ராஜூ
அவங்களே கேக்காட்டாலும் நீங்களா போயி ஒவ்வொரு தடவையும் வான்ட்டடா வண்டில ஏர்றீங்களே தெய்வமே..!- மாஸ்டர்
ரஜினி மிகப்பெரிய ஆளுமை; அவரைக் குறித்த விமர்சனங்கள் நாகரிகமற்றது. - ஹெச்.ராஜா
சொல்லிட்டாருய்யா... நாகரிகத்துல பிஹெச்டி வாங்குனவரு.- பாசில்