அத்தைமடி மெத்தையடி... அத்தனையும் வெற்றியடி!- அன்பான மாமியார் - மருமகள் ஜோடி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மாமியார் – மருமகள் உறவை எந்நேரமும் வெடித்துவிடும் அபாயம் கொண்ட பகை உறவாகவே சித்தரிக்கும் சீரியல்களின் யுகம் இது. ஆனால், பேரன்பின் வெளிப்பாடாக வாழும் மாமியார் – மருமகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிலும் மிக மிக அரிதான மாமியார் – மருமகள் தொடர்பான நெகிழ்வூட்டும் நிகழ்ச்சியைச் சமீபத்தில் நாகர்கோவில் பார்த்தது. ஆம், அரங்கம் நிரம்பி வழிய நடந்த இலக்கிய நிகழ்வில், தன் மருமகள் சப்திகா எழுதிய புத்தகத்தை பெருமிதத்துடன் வெளியிட்டார் மாமியார் விக்டோரியா. அதுவும் வரதட்சணைப் பிரச்சினையை மையமாகக் கொண்ட நாவல் அது என்பது கூடுதல் விஷேசம்!

மாமியார் கையில் புத்தகம் வெளியிடுவதன் காரணத்தை சப்திகா சொன்னபோது மொத்தக் கூட்டமும் நெகிழ்ந்து மகிழ்ந்தது. கன்னியாகுமரி மாவட்டம், பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சப்திகா எழுதியிருக்கும் ‘விடியலில் வெளிச்சம்’ எனும் இந்த நாவல், இவரது இரண்டாவது படைப்பு.

பாசக்கார மாமியார் - மருமகளை நாகர்கோவிலில் அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். மாமியாரைப் பற்றிச் சொல்லும்போதே சப்திகாவுக்கு முகம் முழுவதும் பூரிப்பு.

x