கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
‘இருண்மையிலிருந்து...’, ‘பறவைகள் புறக்கணித்த நகரம்’, ‘தொடுவானமற்ற கடல்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் மூலம் கவனம் பெற்ற பெண் கவிஞர் சக்தி அருளானந்தம். இருநூற்றுக்கும் மேற்பட்ட முகநூல் குழுக்களில் இயங்கிவருபவர். தஞ்சை ப்ரகாஷ் விருது, சிகரம் விருது, திருப்பூர் சக்தி விருது என விருதுகள் பல வென்றிருக்கும் இந்த இலக்கிய ஆளுமை, மின்சாதனப் பொருட்களைப் பழுது பார்க்கும் தொழிலாளி என்பதுதான் ஆச்சரியம்!
சேலம் புதுரோடு பகுதியில் உள்ள விக்னேஷ் எலெக்ட்ரிகல்ஸ் கடை.
“ஏம்மா... இந்த மாதிரி ஸ்விட்ச், ப்ளக் இருக்கா..?”, “ஓட்டைத் தகரத்தை அடைக்கிறதுக்கு என்னவோ பிசின் மாதிரி இருக்குதாமே... அது கிடைக்குமா?” என்று அடுத்தடுத்து விசாரணைகளை வீசும் வாடிக்கையாளர்களுக்கு சளைக்காமல் அவர்கள் கேட்பதை எடுத்துக் கொடுக்கிறார் சக்தி அருளானந்தம்.