திரும்பத் திரும்பத் தவறு செய்கிறார் தினகரன்! - புழுங்கி வெடிக்கிறார் பெங்களூரு புகழேந்தி


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ-வான தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் தினகரனுக்கு பைபை சொல்லிவிட்டு அறிவாலயத்துக்கு வண்டி ஏறியபோது அதை எதிர்த்துக் கடுமையாக அறிக்கை விட்டவர் கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தேவையான உதவிகளை ஓடி ஓடி கவனித்த புகழேந்திக்கும் இப்போது தினகரனோடு மனக்கசப்பு என்றொரு தகவல் கசிய... அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரது ஒவ்வொரு வார்த்தையும் தினகரனின் செயல்பாடுகள் அவருக்குள் எந்த அளவுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை உணர முடிந்தது. அவரிடம் பேசியதிலிருந்து...

தினகரனுக்கும் உங்களுக்கும் மனவருத்தம்... நீங்கள் போன் போட்டால்கூட எடுக்க மறுக்கிறார் என்கிறார்களே... உண்மையா?

அப்படியில்லை... இப்போது நான் போன் போட்டால்கூட, “குட் ஈவினிங் புகழேந்தி... சவுக்கியமா இருக்கீங்களா?”னு கேட்பார். பேசும்போது நல்லாத்தான் பேசுவார். அவர பின் செயல்பாடுகள்தான் வரவர சரியில்லாம போயிட்டு இருக்கு.

x