என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கேரளத்தில் பலரது வாழ்வை நிலைகுலையவைத்த கன மழை, மறுபக்கம் அங்கு கட்டுமானப் பணியில் இருந்த தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு, புதிதாக இன்னொரு கவிதைத் தொகுப்பை எழுத நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், கீழவண்ணான்விளையைச் சேர்ந்தவர் ராஜன் ஆத்தியப்பன். ‘கடைசியில் வருபவன்’, ‘கருவிகளின் ஞாயிறு’ ஆகிய கவிதைத் தொகுப்புகளின் மூலம் கவியுலகப் பிரஜைகளின் கவனம் ஈர்த்தவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் கட்டிடத் தொழிலில் ‘சென்ட்ரிங்’ தொழிலாளியாக இருக்கிறார்.
கேரளத்தில் சகஜ நிலை திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், அங்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த அவரை இல்லத்தில் சந்தித்தேன்.