கரு.முத்து
muthu.k@kamadenu.in
விருத்தாசலம் நீதிமன்ற வளாகம். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அதன் நுழைவாயிலின் அருகே நிற்கிறது ஒரு டி.வி.எஸ் - எக்ஸெல் மொபெட். வெயிலுக்குத் தோதாக அதன் மீது குடை விரிக்கப்பட்டு, சிறு கடையாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சூப் முதல் சுக்கு காபி வரை விதவிதமான பானங்கள் அங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. பெரிய மீசை, சஃபாரி சூட் என்று கம்பீரமான தோற்றம் கொண்ட கடைக்காரர் வாடிக்கையாளர்கள் கேட்பதை சுறுசுறுப்பாக வழங்கிக் கொண்டிருக்கிறார். வழக்கறிஞர்கள், போலீஸார், பொதுமக்கள் என வாடிக்கையாளர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
அந்தக் கடைக்காரரின் பெயர் கண்ணதாசன். பார்க்க மஃப்டி போலீஸ் மாதிரி இருக்கும் இவர், உண்மையில் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர். புணே சிறையிலும், கடலூர் சிறையிலுமாக மொத்தம் 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டு வெளியுலகத்துக்கு வந்தவர். அன்புள்ளம் கொண்ட மனிதர்களாலும் அயராத உழைப்பாலும் இதோ இந்தக் கடையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
நியாயம் கேட்க ஒரு கொலை