குழந்தைகளும் தொழிலதிபர் ஆகலாம்!- மோகனலெட்சுமியின் ‘கிட்ஸ்ப்ரென்யூர்’ திட்டம்


உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

“மதிப்பெண் மட்டுமே நம்மளோட திறமையை அடையாளம் காட்டுறதில்லை. நம்ம மனசுக்குப் பிடிச்ச விஷயத்துல எந்த அளவுக்குத் திறமையா இருக்கிறோம்கிறதுதான் நம்மளோட உண்மையான அடையாளம். அப்படிக் குழந்தைகள்கிட்ட இருக்கிற தனித்திறமையைக் கண்டுபிடிச்சு அதன்மூலமா அவங்ககிட்ட தொழில்முனைப்பை ஊக்குவிக்குறோம்” வார்த்தைக்கு வார்த்தை தன்னம்பிக்கை தாண்டவமாட, உற்சாகமாகப் பேசுகிறார் மோகனலெட்சுமி. குழந்தைகளைத் தொழில்முனைவோராக்கும் ‘கிட்ஸ்ப்ரென்யூர்’ (kidspreneur) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்திவருபவர் இவர்.

 பெருநிறுவனங்களின் சிஇஓ-க்களாகப் பதின்ம வயதினர் பதவி வகிக்கும் நவீன யுகம் இது. இந்தப் புதிய போக்குக்கு ஈடுகொடுக்கும் வகையில், குழந்தைகள் மத்தியில் வர்த்தகம் பற்றிய ஆர்வத்தை விதைக்கும் பணியில் ஈடுபடுகிறது ‘கிட்ஸ்ப்ரென்யூர்.’ 2015- ல், தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான மோகனலட்சுமியும் இளம் வயதிலிருந்தே புதுமையான சிந்தனைகளுடன் வளர்ந்தவர்தான்.

“பள்ளி நாட்கள்லேயே நான் துறுதுறுன்னுதான் இருப்பேன். என்னால ஒரு இடத்துல ரொம்ப நேரம் உட்கார முடியாது. ப்ளஸ் 2-க்கு அப்புறம் என்னால கல்லூரியில படிக்க முடியாதுன்னு வீட்ல தெளிவா சொல்லிட்டேன். அவங்களுக்குப் பெரிய ‘ஷாக்’. என்னோட எதிர்காலம் பத்தி ரொம்பக் கவலைப்பட்டாங்க. அவங்க விருப்பத்துக்காக, ஒரு வருஷம் ‘ஏர் ஹோஸ்டஸ்’ பயிற்சியில சேர்ந்தேன். தொலைதூரக் கல்வியில பிபிஏ-வும் முடிச்சேன். பார்ட் டைம் வேலைகள், ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’, கார்ப்பரேட் ஷோக்கள்ல காம்பியரிங்னு எக்கச்சக்கமான வேலைகள் செஞ்சேன். இப்படியே என்னோட தொடர்பு வட்டத்தை வளர்த்துக்கிட்டேன். ஆனா, இவ்ளோ ஆக்டிவா இருந்தும் என் மேல யாருக்கும் நம்பிக்கை வரல.

x