டெல்லி போராட்டமும் ப.சிதம்பரம் கைதும்!


தொகுப்பு: தேவா

கடந்த வாரம் முழுக்க இணையத்தில் ப.சிதம்பரமும், ஸ்டாலினும்தான் வைரல் ட்ரெண்டிங். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் அறிவித்ததிலிருந்தே, திமுகவையும் ஸ்டாலினையும் கொண்டாடி தீர்த்தார்கள் ஆதரவாளர்கள்.  'இருள் சூழ்ந்த இந்தியாவில் தமிழகத்திலிருந்து ஒளி புறப்படுகிறது' என்றெல்லாம் கவி பாடினார்கள். மறுபக்கம் ஸ்டாலினின் போராட்ட அறிவிப்பை கிண்டல் செய்தும் மீம்கள் பறந்தன. இதற்கிடையில், ப.சிதம்பரத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட பற்றிக்கொண்டது விவகாரம். அவர் ஓடி ஒளிந்துவிட்டதாகவும், கோழை என்றும் பாஜக, அதிமுக அரசியல் தலைவர்கள் அறிக்கைவிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சிலர் அவர் எந்த மாதிரியான கெட் - அப்களில் தலைமறைவாகித் திரியலாம் என்று மீம்களைப் போட்டு சந்தோசப்பட்டுக் கொண்டார்கள். சிதம்பரத்தின் வரலாறு, அவரும் அவரது மகனும் எங்கெல்லாம் என்னென்ன சொத்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்களும் இணையத்தில் பரவியது. அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றி விளக்கம் அளித்தாலும் விடவில்லை சிபிஐ. இரவோடு இரவாக அவரது வீட்டுச் சுவரேறிக் குதித்து அவரைக் கைது செய்து வீரதீர செயல் புரிந்தது.

தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். - பிரேமலதா 
ஆமா... இல்லாட்டி வீட்டை ஏலத்துல விட்டுருவாங்க..?!- மித்ரன்

ரஜினிகாந்தை தவறவிட்டால் வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும். - தமிழருவிமணியன்
நீங்க இவ்ளோ உசுரக் குடுத்து கம்பு சுத்திட்டு இருக்கீங்க மீடியேட்டர் சார். ஆனா, அவரு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம சின்னப் புள்ளைங்க கூட ஜோடியா படம் நடிச்சுட்டு இருக்காப்ல!- ஜால்ரா காக்கா

x