இந்தியாவில் அதிபர் ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!- அதிர்ச்சிக் குண்டு போடும் திருமா


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கிய வைகோ, அதில் இருந்து வெளியேறியதும், தான் கடுமையாகச் சாடிவந்த திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்ததும் அரசியல் நோக்கர்களின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தின. இப்போது இரண்டே மாதத்தில் அந்தக் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸை அவர் கடுமையாக விமர்சித்தது சர்ச்சையாகியிருக்கிறது. அடுத்ததாக ஒரு பொது நிகழ்வில் திருமாவளவனுடனும் வைகோ கோபித்துக்கொண்டதாக தகவல் வரும் சூழலில், திருமாவளவனுடன் ஒரு பேட்டி...

இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வாகி இருக்கிறீர்கள். எப்படியிருக்கிறது பாராளுமன்ற அனுபவம்?

நான் பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டபோது, வழக்கமான மரபுகளும், நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. இப்போது அப்படி எதுவும் பின்பற்றப்படவில்லை. பதவியேற்பது தொடங்கி, ஒவ்வொரு முறை சபாநாயகர் அவைக்கு வரும்போதும் ‘ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்கள் பாஜக உறுப்பினர்கள். மதவாத முழக்கங்கள், கோஷங்களால் ஏதோ பஜனை மடம் போல காட்சி தருகிறது பாராளுமன்றம். நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து முன்கூட்டியே உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், வாசிப்பதற்கும், விவாதிப்பதற்கும் நேரம் தர வேண்டும் என்ற நடைமுறைகூட சரியாகப் பின்பற்றப்படவில்லை.

x