ரெட்டி vs நாயுடு- ஆந்திரத்தை மிரட்டும் அதிகார யுத்தம்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஆந்திர அரசியலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இருவரும் கடுமையான வார்த்தைகளில் ஒருவரையொருவர் அர்ச்சித்துக்கொள்கின்றனர். இதுவரை இல்லாத அரசியல் பகைமை என்கிறார்கள் ஆந்திரர்கள். இதற்கிடையே, இந்த மோதலைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்கக் காய் நகர்த்துகிறது பாஜக.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 175 இடங்களில் 151-ல் வென்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 23 இடங்களுடன் படுதோல்வியடைந்தது தெலுங்கு தேசம். அதன் பின்னர் அங்கு பரபரப்புகளுக்குப் பஞ்சமேயில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு சண்டையுமாக இரு தரப்புக்கும் இடையே வளர்ந்துவருகிறது பகை.

வலுக்கும் மோதல்

x