காஷ்மீரில் ஒரு சென்ட்!


தொகுப்பு: தேவா

கடந்த வாரம் முழுக்கவே சமூக வலைதளங்களில் காஷ்மீர்தான் வைரல். கூகுளில் காஷ்மீர் ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்த தேடல் அதிகமாக இருந்தது. அதேசமயம்,  ‘காஷ்மீரில் ஒரு சென்ட் இடமாவது வாங்கணும்’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.  ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவது சரியா, தவறா என்ற விவாதங்கள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தற்போதைய சூழலில் காஷ்மீர் மக்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பதற்றம் நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் வழியாக பரவி வருகிறது. ஆனால், பலர் காஷ்மீர் விஷயத்திலும் விளையாட்டாகவே பதிவுகளை வெளியிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். சமூக வலைதளத்தில் எல்லா பிரச்சினைகளையும் விளையாட்டாக மாற்றும் போக்கு ஆபத்தானது. 

ஸ்டாலின் என்ற பெயரிலேயே புரட்சி இருக்கிறது.- மம்தா பானர்ஜி
புரட்சி எங்க தீதி இருக்கு... எப்பப் பாத்தாலும் கையில துண்டு சீட்டு தான் இருக்கு!- டி.எஸ்.மணிகண்டன்

காஷ்மீர் பிரச்சினை குறித்து திமுக அனைத்துக் கட்சி கூட்டம்.- செய்தி
இவங்க கூட்டத்தைக் கூட்டி மிச்சர் சாப்ட்டா நாளைக்கே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வந்துடும்!- பூபாலன்

x