குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“தமிழ்நாட்டுக்கு வேணும்னா எடப்பாடி முதலமைச்சரா இருக்கலாம்... ராம்நாட்டுக்கு நான்தான்யா முதலமைச்சர்” வெளிப்படையாகவே இப்படி டாம்பீகம் பண்ணிக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மருத்துவர் மணிகண்டனைத் தடாலடியாய் அமைச்சரவையிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வைத்தியம் மணிகண்டனுக்கு மட்டுமல்ல... அவரைப் போல தடியெடுத்து ஆடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் இன்னும் சில மாண்புமிகுக்களுக்கும் சேர்த்துத்தான் என்கிறது அதிமுக வட்டாரம்!
‘பேக்கேஜ்’ அமைச்சர்!