லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
இரவு பத்து மணி. நீங்கள் தூங்கப்போகும் நேரம். விடிகாலையில் எழுந்து அடுத்த நாள் அலுவலகத்துக்கு ஓட வேண்டும். அப்போதுதான் அந்த அலறல் வரும். “ஐயோ நாளை வீட்டுப்பாடம் செஞ்சிட்டுப் போகணும்மா. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணும்மா” அது என்ன எப்போதும் அம்மா? அப்பாவாக ஒரு நாள்கூட இருக்கலாகாதா? சரி, இந்த விவாதம் இப்போது வேண்டாம். யாராக இருந்தாலும் கடைசி நிமிட ஹோம் வொர்க் தரும் பரபரப்பு நம் இந்தியப் பொதுக் கலாச்சாரம். இதற்கு ஒரு எளிய தீர்வாக வந்திருக்கிறது சாக்ரடீஸ் (Socrates). இது ஒரு செயலி. குழந்தைகளின் கற்றலுக்குத் துணை நிற்கும் செயலி (Learning App).
இந்தச் செயலி 2016 ஆகஸ்ட்டிலேயே வெளிவந்துவிட்டாலும் இன்னும் பலருக்குப் பரிச்சயமில்லை. இந்தச் செயலி வீட்டுப்பாடங்களைக் குழந்தைகள் திறம்படச் செய்வதற்குப் பெரிதும் கைகொடுக்கிறது. பெற்றோர் இதைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளின் கற்றலைத் துரிதப்படுத்த முடியும். ஆங்கிலம், அல்ஜீப்ரா, கணக்கு, வேதியியல், இயற்பியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றன. நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் பாடத்திட்டங்கள் வரை இந்தச் செயலி செயல்படும். கூகுள் ப்ளே ஸ்டோர் வழி இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கணினியைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் iOS 8 ஆபரேடிங் சிஸ்டம் இதற்குத் தேவை.
தர்க்கம், தத்துவம்