நான் திமுகவுக்குப் போகிறேனா..?- அதிருப்தி மைத்ரேயன் அதிரடி பேட்டி!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பாஜகவில் இருந்து மைத்ரேயன் அதிமுகவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. “அணிகள் இணைந்துவிட்டன; மனங்கள் இணையவில்லை” என்று கடந்தாண்டு அக்டோபரில் ‘ட்வீட்' செய்தவர், இப்போது “திருப்புமுனையில் நிற்கிறேன். அம்மாவின் ஆன்மா என்னை வழிநடத்தும்” என்று ஒரு நீண்ட பதிவின் இறுதியில் ‘க்' வைத்திருக்கிறார். இதற்காக இதுவரையில் அதிமுக தலைமை அவரிடம் விளக்கமும் கேட்கவில்லை, சமாதானமும் பேசவில்லை. என்ன மனநிலையில் இருக்கிறார் மைத்ரேயன்? பேசலாம்.

அக்டோபர் ‘ட்வீட்’டில் ஆரம்பித்து, அம்மா சமாதி பேட்டி வரையில் உங்களிடம் ஓர் அதிருப்தி தென்படுகிறது. வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதிமுகவில் நீங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறீர்களா?

ஆம். டெல்லியில் அதிமுகவின் முகமாக இருந்த எனக்கு அம்மா இருந்திருந்தால் இன்னொரு வாய்ப்புக் கொடுத்திருப்பார்கள்.  தென்சென்னைதொகுதியைக் கொடுங்கள் என்று நானே வாய்விட்டுக் கேட்டும் தரவில்லை. கொடுக்காதது கூட பிரச்சினையில்லை. “கொஞ்சம் பொறுங்க. அடுத்த முறை பார்த்துக்கலாம்” என்று சொல்லியிருக்க வேண்டாமா? குறைந்தபட்ச மரியாதை கூட கொடுக்கவில்லையே?

x