எனது வலிமையை நான் உணர்ந்த தருணம்!- ஃபிரான்சிஸ் கிருபாவின்  இன்னொரு தொடக்கம்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சென்னை கோயம்பேட்டில் வலிப்பு நோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வழிப்போக்கருக்கு உதவப்போய் கொலைப் பழி சுமந்த கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபா. அவரது அந்த அனுபவத்தைத் தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தமிழ் இலக்கிய உலகம் திரண்டு குரல் கொடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டுவிட்டாலும், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து அவரிடம் இன்னும் பலரும் துக்கம் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் ஃபிரான்சிஸ் கிருபா.

புதுச்சேரியில் இயங்கிவரும் ‘மீறல் இலக்கியக் கழகம்’ இந்தாண்டுக்கான கபிலர் விருதை கிருபாவுக்கு அறிவித்
திருக்கிறது. ‘சக்தியின் கூத்தில் ஒளி ஒரு தாளம்’ என்னும் பாரதியின் கவிதை வரியைத் தலைப்பாக்கி தன்னுடைய அடுத்த 
கவிதைத் தொகுப்பை வெளியிடவும் ஆயத்தமாகிவருகிறார். கூடவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரி’ படத்திலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவருகிறார்.  ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்’ உட்பட 7 கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கும் ஃபிரான்சிஸ் கிருபா,  ‘கன்னி’ என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். தனது படைப்புகளுக்காக சுஜாதா விருது, சுந்தரராமசாமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் ‘மண்ணைத்தொடு… மார்பில் இடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின்  ‘பூவும் பூவும் பேசும் நேரம்’, உள்ளிட்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார் பிரான்சிஸ் கிருபா. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இவர் எழுதிய ‘குதிக்குற… குதிக்குற குதிரைக் குட்டி’ பாடலை இளையராஜா இசையமைத்துப் பாடவும் செய்தார் என்பது இவரது கலைப்பயணத்தில் ஒரு மைல்கல். ஃபிரான்சிஸ் கிருபாவைக் ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன். நீண்டு வளர்ந்திருந்த தலைமுடியைக் கோதியவாறே பேசத் தொடங்கினார்.

x