அடுத்தது மத்திய பிரதேசம்? - ஆட்டம் காட்டும் கமல் நாத்... அடக்கி வாசிக்கும் பாஜக!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

“பாஜகவுக்குத் துணிச்சல் இருந்தால், என் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கட்டும்” – கர்நாடகத்தில் மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியின் உச்சத்தில் பாஜக இருந்தபோது, மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் விடுத்த சவால் இது. கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததுபோல் மத்திய பிரதேசத்திலும் நிகழுமா என்று பலரும் இன்றைக்குக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், “அதற்கு வாய்ப்பில்லை ராஜா” என்று அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்
கமல் நாத்.

அதிர்ந்த பாஜக

2018-ன் இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்தது.  சுதாரித்துக்கொண்ட பாஜக, மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துகொண்டதுடன், பாஜக அல்லாத மாநில அரசுகளைக் கவிழ்க்கும் திட்டத்திலும் முனைப்புடன் இறங்கியிருக்கிறது. மாற்றுக் கட்சிகளின் ‘அதிருப்தி’ எம்எல்ஏ-க்களுக்கு வலைவீசிக் கொண்டிருக்கிறது. அவர்
களின் அடுத்த இலக்கு மத்திய பிரதேசம்தான் என்கிறார்கள்.

x