இஸ்லாமிய பெண்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் பசு குண்டர்களை ஒடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வந்திருக்கலாமே?- சீறும் ஜவாஹிருல்லாஹ்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மத்தியில் மீண்டும் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே நிறைய சட்டத் திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. அதில் பல சட்டங்கள் இஸ்லாமியர்களைக் குறிவைத்துக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று விமர்சனங்கள் வருகிற சூழலில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வுடன் ஒரு பேட்டி.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறதா?

அதிர்ச்சியடைவதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றுமேயில்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்
கள் என்று சொன்னோமோ அதை எல்லாம் வரிசையாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் காட்டிய வழியில் மின்னல் வேகத்தில் பயணிக்கும் அவர்களைத் தடுப்பதுதான் ஜனநாயக சக்திகளின் முதன்மைக் கடமை.

x