தொகுப்பு: தேவா
நாடு முழுவதும் கடந்த வாரம் காடும் பிரதமர் மோடியும்தான் ட்ரெண்டிங். டிஸ்கவரி சேனலின் `மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் என்ற செய்தியே பலருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும், என்ன செய்தாலும அதை வைத்து ஒரு கான்செப்ட் உருவாக்கி மீம், கலாய் வீடியோ என உருவாக்கி பரப்பிவிடுகிறார்கள். இந்த `மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்டு உருவாக்கப்படும் போலி நிகழ்ச்சி என்ற விமர்சனம் இருந்துவருகிறது. இதில் பிரதமர் மோடி களமிறங்கியதால் அதை பலர் உறுதியே செய்துவிட்டனர். சும்மாவே படை பரிவாரங்களுடன் போகும் பிரதமர் தனியாக காட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் என்றால் யார் நம்புவார்கள் என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள். பியர் கிரில்ஸும் மோடியும் பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை மூன்றே நாளில் 30 லட்சம் பேர் பார்த்தார்கள். ஆனால், இதையொட்டி நெட்டிசன்கள் உருவாக்கிய வீடியோக்கள், மீம்ஸ்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் பகிரப் பட்டன. எப்படியோ, நமது பிரதமர் நாளுக்கு நாள் அகில உலக பிரபலமாகிக்கொண்டே வருகிறார்!
2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும். - உதயநிதி ஸ்டாலின்
தம்பி... இது உங்கப்பா டயலாக். - பர்வீன் யூனுஸ்
ரியல் லைஃப் அண்ணாமலை நான்! - ஹெச்.ராஜா
எப்போ சார் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டுவீங்க..!- எனக்கொரு டவுட்டு