இடதுசாரிகள் மட்டுமே அறநெறி கொண்ட சக்திகள்!- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி


ஆர்.ஷபிமுன்னா
shaffimunna.r@hindutamil.co.in

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகியிருக்கிறார் டி.ராஜா. அக்கட்சியின் தேசியச் செயலாளராக இருந்தவர், தொடர்ந்து இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவர் என்று பல பெருமைகளுக்கு உரிய டி.ராஜா, இந்தப் பொறுப்புக்கு வரும் முதல் தமிழர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனும் சிறப்பையும் பெறுகிறார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அவரை ‘காமதேனு’வுக்காகச் சந்தித்தேன். 

 இடதுசாரிகள் மிகப் பெரிய சவால்களைச் சந்திக்கும் தருணத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். உங்கள் செயல்பாடுகளின் முன்னுரிமை என்ன?

 தேசிய அளவில் கட்சியைப் பலப்படுத்துவதும், எல்லா நிலையிலும் கட்சியைப் புத்துயிர்ப்புடன் செயல்படச் செய்வதும்தான் எனது இப்போதைய முக்கியப் பணிகள்.

x