என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
நெல்லை பாலபாக்யா நகரில் இருக்கும் அந்த வீடு முழுவதும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. வீட்டின் நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கிறார் புவனேஸ்வரி. அவரது இரு குழந்தைகளும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடுகின்றன. அவர்கள் மீதும் ஒரு பார்வையை வைத்துக்கொண்டே, வாட்ஸ் - அப்புக்குள் மூழ்கியிருக்கிறார். அன்றாடம் ‘குட் மார்னிங்’ குறுஞ்செய்திகள் அனுப்பும் வழக்கமான வாட்ஸ் - அப் பயன்பாட்டாளர் அல்ல புவனேஸ்வரி. வாட்ஸ் - அப் மூலம் பலரது வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்!
ஆம், வாட்ஸ் - அப்பில் இருபதுக்கும் அதிகமான குழுக்களை வைத்திருக்கும் புவனேஸ்வரி, போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு அவற்றின் மூலம் இலவசமாக வழிகாட்டிவருகிறார். இல்லத்தரசி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய் எனும் முறையில் ஏராளமான வேலைகளுக்கு மத்தியில் இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறார்.
ஆசிரியைக் கனவு