கரு.முத்து
muthu.k@kamadenu.in
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்துகொண்டிருக்கிறார் அத்திவரதர். அவரைத் தரிசிக்க அலைமோதும் கூட்டம் தினசரி செய்தியாகிவிட்டது. அத்திவரதர் சிலை அத்திமரத்தால் செய்யப்பட்டது என்பதும் அதன் சிறப்புகளில் ஒன்று. இதேபோல், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திமரப் பெருமாள், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தில் தினந்தோறும் கடைக்கோடி பக்தர்களும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி.
கரிகாலச் சோழப் பெருவழி என்றழைக்கப்படும் பூம்புகார் - கல்லணை சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சோழம் பேட்டைக்கு அருகில் இருக்கிறது கோழிகுத்தி. இங்கு சுமார் 1,200 ஆண்டுகால வரலாறு கொண்டதாகக் கருதப்படும் சீனிவாசப்பெருமாள் கோயிலில் உள்ள மூலவரின் பெயர் வான்முட்டிப் பெருமாள். 14 அடி உயரத்துடன் விஸ்வரூப
மாகக் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பெருமாள் சிலை ஒரே அத்திமரத்தில் செதுக்கப்பட்டது என்பதுதான் கூடுதல் விசேஷம்.
தல புராணம்