அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்தினுள் வைக்க வேண்டும்?- கேள்வி எழுப்பும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மதுரை ஆதீனத்துக்கு அடுத்தபடியாக அதிரடி பேட்டிகள், அரசியல் அறிக்கைகள், போராட்டம், சர்ச்சை என்று ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டுபவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர். ஆண்டாள் விவகாரத்தின்போது, “எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்” என்று சொல்லி அதிரவைத்தவர். இப்போது அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக் கூடாது என்று விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார். அவரைக் காண ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றோம். வட இந்திய சீடர்கள் சூழ வரவேற்றவர், அட்சதை தூவி நம்மை ஆசிர்வதித்தார். இனி ஜீயரின் பேட்டி...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தைப் பற்றியும், தங்களது பின்னணி பற்றியும் சொல்லுங்களேன்…

இது 600 ஆண்டுகள் பழமையான மடம். ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரம் என்று போற்றப்படும் ஸ்ரீமணவாள மாமுனிகளால் உருவாக்கப்பட்டது. அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அதன் 24-வது பட்டம் நாம். நமது சொந்த ஊர் ஈரோடு பக்கம். திருச்சியில்தான் வாழ்ந்தோம். திருப்பதியில் படித்தோம். திருதண்டி ஜீயர் சுவாமி, திருப்பதி பெரிய சுவாமிகள் ஆகியோரிடம் கைங்கர்யம் பார்த்துள்ளோம். பெருமாளின் அனுக்கிரகத்தால் ஒரு கட்டத்தில் மணவாழ்விலிருந்து சந்நியாசம் பெற்று, 2017-ல் ஜீயராகப் பொறுப்பேற்றோம்.

x