கரு.முத்து
muthu.k@kamadenu.in
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றிக் கோட்டையை எட்டிப் பிடிக்க அதிமுகவும் திமுகவும் களத்தில் தீவிரமாக கம்பு சுற்றுகின்றன.
நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி உட்பட 28 பேர் களத்தில் இருந்தாலும், இங்கே நேரடிப் போட்டி என்பது திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கும்தான். ஆகஸ்ட் 5-ல் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலில் வெல்வதற்கான தேர்தல் வியூகங்கள் முதல் பண விநியோகம் வரை இரண்டு முக்கியக் கட்சி முகாம்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
மோதும் எம்ஜிஆர் பக்தர்கள்எம்ஜிஆரின் தளகர்த்தர்களில்ஒருவராக இருந்த புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தனதுபூஜை அறையில் எம்ஜிஆர் படத்தை வைத்துக்கடவுளாக வழிபடுகிறவர். அதேபோல, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும் எம்ஜிஆரை தெய்வமாகத் துதிப்பவர் துரைமுருகன். ஆக, எம்ஜிஆரின் தீவிர பக்தர்களுக்குள் நடக்கும் பலப்பரீட்சைதான் வேலூர் தேர்தல் என்கிறார்கள்.