அம்மச்சி கையில் அட்சய பாத்திரம்


என்.சுவாமிநாதன்

குமரி மாவட்டத்தின் பாசன அணைகளில் ஒன்றாக மட்டுமே இதுநாள் வரை பார்க்கப்பட்டுவந்த சிற்றாறு அணை, இன்றைக்குப் பலர் வந்து செல்லும் சுற்றுலா தலம். கேரள எல்லையில் இருக்கும் தமிழகப் பகுதி என்றாலும், இங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சேட்டன்களும் சேச்சிகளும்தான். தாங்கள் இங்கு அடிக்கடி வந்து செல்ல முக்கியக் காரணங்களில் ஒன்று ‘அட்சய பாத்திரம்’ உணவகம் என்கிறார்கள் சுவை மறக்காத சுற்றுலாவாசிகள். தமிழக - கேரள எல்லைப் பகுதியான ‘நெட்டா’ என்னும் இடத்தில் இருக்கிறது இந்த உணவகம்.

சாலையின் ஒருபுறம் உயர்ந்து நிற்கும் மரங்கள், மறுபுறத்தில் சமுத்திரம்போல் விரியும் சிற்றாறு என்று கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த அணைக்கு அருகில், வயிறுகளுக்கு வகை வகையாய் ஆக்கிப்போடும் உணவகம்தான் ‘அட்சய பாத்திரம்.’

x