வெற்றிக் கோப்பையை எதிர்பார்த்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கடந்த வாரம் பேரிடியாகவே இருந்தது. அதிலும் தொடர்ந்து விக்கெட்டுகள் சரசரவென விழுந்தாலும், எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்த தோனி ஒரு அங்குல இடைவெளியில் ரன் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தோனிக்கு கடைசி உலகக் கோப்பை போட்டி என்பதால் ரசிகர்கள் ரொம்பவே கவலைக்குள்ளாகினர். விக்கெட்டுகள் தொடர்ந்து விழும்போதே தோனியை இறக்கியிருந்தால் ஆட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு சென்றிருப்பார் என்று கருத்து கூறினர்.
முந்தைய நாள் வரையிலும் உற்சாகமாக கமென்டுகளும், விவாதங்களும் நடத்திக்கொண்டிந்தனர் நெட்டிசன்கள். இறுதியில், ஆட்டம் தோல்வியடைந்ததும் அவர்களின் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போனது. தோனியின் பழைய ஆட்டங்கள், அவருடைய சாதனைகள், என வீடியோக்களும், புகைப்படங்களுமாக இணையத்தை நிறைத்தன. அதிலும் ஆட்ட முடிவில் இந்திய அணி கேப்டன் கோலி சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருக்க, ஓரமாக எதையும் பொருட்படுத்தாமல் தோனி கடந்துசெல்லும் வீடியோ துணுக்கை அதிகம் பேர் பகிர்ந்தனர். முடிந்த பிறகு விவாதித்து என்ன செய்வது? இனி தோனி இல்லாத உலகக் கோப்பையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை என்றும் சிலர் உருகினர்.
ஐசியு-வில் கர்நாடக அரசு..!
உயிர் பிழைக்குமா..?