அஸ்திவாரத்தை அசைக்கும் ஆவேச அரசியல்! - மனம் மாறுவாரா மம்தா?


வெ.சந்திரமோகன்

ஒரு காலத்தில் தனது போர்க் குணத்தின் மூலம் அரசியல் செல்வாக்கையும் மக்களின் அபிமானத்தையும் வளர்த்துக்கொண்ட மம்தா பானர்ஜி, இன்றைக்கு எதிராளியின் வியூகங்களைப் புரிந்துகொள்ளாமல் பொறுமையிழப்பதால் தொடர் பின்னடைவைச் சந்தித்து

வருகிறார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தனது அடுத்தடுத்த அஸ்திரங்கள் மூலம் மம்தாவின் செல்வாக்கை காலி செய்வதுடன், வங்கத்தில் தங்கள் இருப்பை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பில் தீவிரம் காட்டுகிறது பாஜக. என்ன நடக்கிறது வங்கத்தில்?

வங்கத்தில் பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதல் பல பரிமாணங்களைக் கொண்டது. முதலாவது, வன்முறை அரசியல். மக்களவைத் தேர்தலின்போது உச்சத்தில் இருந்த பாஜக – திரிணமூல் கட்சி இடையிலான அரசியல் மோதல், இன்றைக்கு வன்முறை மோதலாக மாறியிருக்கிறது. இரு தரப்பிலும் தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.

x