மீண்டும் ஒலிக்குமா நாடாளுமன்றப் புலியின் குரல்?


கே.கே.மகேஷ்

“என்னுடையபொதுவாழ்க்கையில் நான் பணியாற்ற மிகவும் விரும்புகிற இடம் இந்திய நாடாளுமன்றம். அங்கே தமிழ் இனத்துக்காக, தமிழர்களுக்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்காகக் ரல் கொடுப்பது மட்டுமல்ல என் விருப்பம். நமக்காகப் பேச யாருமில்லையே, நாதியற்றுப் போனோமே என்று எங்கே எந்த மக்கள், எந்த மூலையில் வேதனையில் இருந்தாலும் அவர்களின் வேதனையையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்”

- வைகோ அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.

23 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு வைகோவை அழைக்கிறது. “மதிமுகவைத் தொடங்கியபோது திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே திமுகவின் தயவில்தான் மாநிலங்களவைக்குச் செல்கிறார். இதுதான் அவரது வளர்ச்சியா?” என்று அவரது அரசியல் எதிரிகள் கடுமையாக விமர்சித்தாலும், இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் வைகோ உறுதியாகவே இருந்தார்; இன்னமும் இருக்கிறார். ஏற்கெனவே 2004 தேர்தலில் போட்டியிடாமல் போனதை, "பொதுவாழ்வில் நான் செய்த மிகப் பெரிய தவறு” என்று வருத்தத்துடன் குறிப்பிடுவார். இம்முறையும் அந்தத் தவறைச் செய்யத் தயாராக இல்லை.

x