திசை மாறலாமா மாணவ சமுதாயம்?


சென்னையில் பேருந்து தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றியிருக்கும் அட்டகாசங்கள் மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன. சாகசம் என்று கருதிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்துகொள்ளும் ஒரு சிலர், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர் என்பது வருந்தத்தக்க விஷயம்.

கல்லூரிக்குச் செல்லும் பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் நன்றி தெரிவிக்கும்

விதமாகத்தான் பேருந்து தினக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. காலப்போக்கில், அது கும்பல் மனோபாவமும், சாகசம் புரியும் ஆவலும் நிறைந்ததாக மாறிவிட்டது.

இதுபோன்ற கொண்டாட்டங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் 2011-லேயே தடை உத்தரவு பிறப்பித்தது. எனினும், ஒவ்வொரு வருடமும் தடையை மீறி இப்படி அத்துமீறும் மாணவர்கள், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இந்த ஆண்டும் சென்னையில் அப்படி அத்துமீறிய பல மாணவர்கள் மீது, காவல் துறை வழக்குகள், கல்லூரியிலிருந்து இடைநீக்கம் என்று கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

x