கதை எழுதும் கல்லூரிக் காவலாளி!- சிந்தனைச் சிற்பி ஸ்ரீதர கணேசன்


என்.பாரதி

அழகான காலை நேரம் அது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்குள் மாணவர்களும், ஆசிரியர்களும் காலை நேரத்துப் பரபரப்பில் பறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஊடே லோடு ஆட்டோ ஒன்றும் செல்ல, “என்னப்பா ஏய்...” என்று குரலை உயர்த்துகிறார் வாட்ச்மேன் ஸ்ரீதர கணேசன். “கேன்டீனுக்கு சாமான்…” என ஆட்டோ ஓட்டுநர் பதில் கொடுத்ததும், “போட்டும்... போட்டும்” என்றபடியே ஆட்டோ நம்பரைக் குறிக்கிறார். ஸ்ரீதர கணேசன் கல்லூரி வாட்ச்மேன் மட்டுமல்ல... விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படைப்பாளியும் கூட!

உப்புவயல், சந்தி, வாங்கல், அவுரி, சடையன்குளம் என 5 நாவல்களை இவர் சமைத்திருக்கிறார். மீசை என்ற சிறுகதைத் தொகுப்பையும், விடியல் என்ற தலைப்பில் மூன்று குறுநாவல் தொகுப்பையும் தந்திருக்கும் படைப்பாளி ஸ்ரீதர கணேசன். இவரது படைப்புகள் ஆறு

பல்கலைக்கழகங்களிலும், பல சுயநிதி கல்லூரிகளிலும் பாடமாக இருக்கிறது. இவரது எழுத்துகளைத் திறனாய்வு செய்து நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இத்தனை சாதித்திருந் தும் அதற்கான சாயல் கொஞ்சமும் இல்லாமல் பகலில் தினக்கூலி அடிப்படையில் கல்லூரி வாட்ச்மேனாகவும், இரவில் படைப்பாளியாகவும் சுழன்று கொண்டிருக்கிறார் ஸ்ரீதர கணேசன்.

x