நடமாடும் அறிவுலகம்... வாசிப்பை வளப்படுத்தும் தனி மனிதர்!


உ.சந்தானலெட்சுமி

சென்னை கேகே நகரின் ஒரு தெருவில் நின்றுகொண்டிருக்கிறது அந்த வேன். அதிலிருந்து இறங்கிச் செல்லும் சிறுவர்களின் முகங்களில், ஏதோ ஐஸ்க்ரீம் வாங்கிச்செல்லும் குதூகலம். ஆனால், கைகளில் இருந்ததோ புத்தகங்கள் மட்டுமே. ஆச்சரியத்துடன் அருகில் சென்றால், ‘நடமாடும் நூலகம்’ என்ற போர்டுடன் வரவேற்கிறது அந்த வாகனம்.

வேனிற்குள் சின்னச் சின்ன அலமாரிகளாகப் பிரிக்கப்பட்டு, புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மூன்று பெண்கள் புத்தக வேட்டையில் மூழ்கியிருந்தார்கள்.

“வாங்கம்மா! என்ன புக் பாக்குறீங்க?” என்று புன்னகைக்கிறார் கோபி சம்பத். அறிமுகப் படலங்கள் முடிந்த பின்னர் பேசத் தொடங்கினார்.

x