தொகுப்பு: தேவா
தஞ்சாவூர் திருப்பனந்தாளில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பலர் ராஜராஜ சோழனின் சாதியைக் குறிப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று கூறிய ரஞ்சித், அவரது காலம் பொற்காலம் அல்ல இருண்ட காலம் என்றும் தலித்களின் நிலங்களை அபகரித்தார் என்றும் கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதம் செய்தனர். அவர் மீது வழக்கும் பதிவானது. ரஞ்சித் சொன்னதை வைத்து சிலர் வரலாற்றையும் தோண்ட ஆரம்பித்து அது தொடர்பான பதிவுகளையும் இடுவதால் வலைதளங்களில் இது தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. ராஜராஜ சோழன் தமிழர்களிடையே பெரிய பிம்பமாக பதிவாகியுள்ள நிலையில் ரஞ்சித் கவனமாகப் பேசியிருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக ஒரு வீடு போன்றது .
- திண்டுக்கல் சீனிவாசன்