விஸ்வரூப வெற்றி!- சாதித்துக் காட்டிய மோடி - அமித் ஷா கூட்டணி


வெ.சந்திரமோகன்

‘மோடி சுனாமி’ – மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் பிரம்மாண்டமான வெற்றியை வர்ணிக்க வட இந்திய ஊடகங்கள் பயன்படுத்தும் பதம் இது. அடுக்கடுக்காக உயர்ந்து வளர்ந்த மோடி அலையின் விஸ்வரூபம் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எதிர்க்கட்சிகளை வாரிச் சுருட்டி வீசியிருக்கும் மோடியின் வேகத்தைப் பார்ப்பவர்கள் இதை மறுபேச்சின்றி ஒப்புக்கொள்வார்கள். கருத்துக் கணிப்புகள் - வாக்குக் கணிப்புகள் மீதான சந்தேகங்கள். ஹேஷ்யங்கள் அத்தனையையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது

மோடி - அமித் ஷா கூட்டணி!

பாஜகவின் அசுர வெற்றி சாத்தியமானது குறித்துப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு என்று பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி மோடி வென்றது எப்படி என்றும் சிலர் புருவம் உயர்த்துகிறார்கள். ஆனால், 2014 தேர்தலைவிடவும் பெரிய வெற்றியை நோக்கிய இலக்கை பாஜக எப்போதோ நிர்ணயித்துவிட்டது. “அப் கீ பார் 300 பார்” என்று அமித் ஷா முன்னெடுத்த முழக்கத்தை மோடி நிறைவேற்றியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாஜக வகுத்த வியூகம் அப்படி!

x