கரண்டி பிடிக்கிறதே கல்விக்கு உதவத்தான்!- பிரியாணி மாஸ்டரின் பெரிய மனசு


என்.சுவாமிநாதன்

நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்து அடுப்பில் இருக்கும் மட்டன் பிரியாணியின் கமகம வாசனை காற்றில் கலந்து யாரையும் கேட்காமலே வாசல்தாண்டி வெளியே வருகிறது. அதன் தூக்கல் வாசமே அங்கே மாலிக் அகமது கரண்டி பிடிக்கிறார் என்று ஜாடையாய் சொல்லிவிட்டுப் போகிறது.

குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வீட்டு விசேஷம் என்றாலே மாலிக்கின் பிரியாணி தான் ஹைலைட். அதேபோல் இங்கு நடக்கும் அசைவ விருந்து கொண்டாட்டங்களிலும் பெரும்பாலும் மாலிக் பிரியாணி மணக்கும். மாலிக்கின் கைப்பக்குவம் தெரிந்த பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் அவரது மனப்பக்குவம்!

ஒரே நாளில் மாலிக்கிற்கு நான்கைந்து ஆர்டர்கள்கூட குவிந்துவிடும். சமையல் கலையில் அத்தனை பிஸியான மாலிக், தனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். சாதி, மதம் என்ற கட்டங்களை எல்லாம் கடந்து விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கொண்டிருக்கிறார் மாலிக்.

x