தொடரட்டும் இந்தப் பொற்காலம்
இந்தத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்ததை இரண்டு கட்சிகளின் தலைமை பீடங்களுமே பெருமையாக நினைக்கின்றனவாம். இது இனி வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்று இந்த இரு கட்சித்தலைமைகளும் பேசி வைத்திருக்கும் நிலையில், அன்புமணியின் மகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பெண் கொடுப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதாம்!
ஜெயலலிதாவுக்கே சீட் இல்லையாம்!
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார் இளைஞர் - இளம் பெண்கள் பாசறையின் ஒன்றியத் தலைவர் ஜெயலலிதா. ஆனால், முன்னாள் எம்எல்ஏ-வான மோகனை நிறுத்திவிட்டது தலைமை. இதை எதிர்த்துக் கிளம்பிய ஜெயலலிதா, “ஏற்கெனவே எம்எல்ஏவா இருந்தப்பவே தொகுதிக்கு ஒண்ணும் செய்யல. அதனால வேட்பாளர மாத்தணும்” என்று பேட்டியெல்லாம் கொடுத்தார். இதை வைத்து, “அதிமுக வேட்பாளரை அம்மாவே எதிர்க்கிறாங்க” என்று ட்விஸ்ட் செய்து பிரச்சாரமாக்கியது தினகரன் கோஷ்டி. இதைப் பார்த்துவிட்டு ஜெயலலிதாவைப் பேச வேண்டிய விதத்தில் பேசி மைக் ஆஃப் செய்தது அதிமுக தலைமை. இப்போது அந்த அம்மாவே முக்கியமானவர்களுக்கு போன் போட்டு, “கட்சி யாரை நிறுத்துதோ அவங்களுக்காக வேலை செஞ்சு ஜெயிக்க வைக்கிறதுதானே வழக்கம்” என்று ஆறுதல் அறிக்கை வாசிக்கிறாராம்.