ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக!


குள.சண்முகசுந்தரம்

“ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போறார்” என்று டிடிஎஸ் (தங்கதமிழ்செல்வன்) ஜாலியாய் கொளுத்திப்போட்ட ஒரு சரவெடி ஓபிஎஸ்ஸின் அண்டசராசரங்களையும் அதிர வைத்திருக்கிறது!

பணிவு நாயகர் என்று பெயரெடுத்த ஓபிஎஸ், எந்த விஷயத்துக்கும் அவ்வளவு சீக்கிரம் ரியாக்ட் செய்ய மாட்டார். நரி இடம் போனால் நமக்கென்ன... வலம் போனால் நமக்கென்ன என்ற தத்துவத்தின்படி நடக்கும் அவர், அனைத்துக்கும் சேர்த்துவைத்து இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். “என் உயிர் பிரியும் நாளில் அதிமுக கொடி போர்த்துவதையே என் வாழ்நாளின் பெருமையாக லட்சியமாகக் கொண்டு வாழும் எளியவன்” என்று ஓபிஎஸ் தனது அறிக்கையில் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார்.

நிச்சயம் நடக்கும் - டிடிஎஸ்

x