இர.அகிலன்
தேர்தல் களத்தில் அன்புமணியின் அழுகைப் பிரச்சாரத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய விளம்பரத்தை எல்லாம் ஒற்றை ட்வீட் போட்டு துவம்சம் பண்ணி விட்டார் நடிகை கருத்து கஸ்தூரி.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல். போட்டியைப் பார்த்து கடுப்பான கஸ்தூரி, எம்ஜிஆர் - லதா இணைந்து நடித்ததை கொச்சைப்படுத்தும் விதமாக வில்லங்க ட்வீட் ஒன்றைப் போட... பரபரவென்று பற்றிக்கொண்டது இணைய உலகம்.
இத்தனைக்கும் அன்று மாலைதான் ‘மாளிகை’ பட நிகழ்ச்சியில், கமல்ஹாசனைக் கிண்டல் செய்து பேசி, கே.எஸ்.ரவிக்குமாரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் கஸ்தூரி. விவகாரம் கலவரமான சமயத்தில் கஸ்தூரியைத் தொடர்புகொண்டு பேசினோம்.