மழலையின் மனிதநேயம்!


எஸ்.ரவிக்குமார்

வியர்க்க விறுவிறுக்க உள்ளே ஓடிவந்த அந்தச் சிறுவனுக்கு மூச்சு வாங்கியது. ‘‘நர்ஸ் அக்கா, ப்ளீஸ்! இதை எப்படியாச்சும் காப்பாத்துங்களேன்!’’ என்று கூறிய அவனது கையில் ஒரு கோழிக்குஞ்சு.

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நர்ஸ் அவன் கையில் இருந்த கோழிக்குஞ்சைப் பார்த்தார். அது இறந்துவிட்டிருந்தது.

‘‘இதை பிழைக்க வைக்க முடியாதே கண்ணா’’ என்று நர்ஸ் சொன்னதை காதில் வாங்கும் மனநிலையில் அவன் இல்லை.

x