குள.சண்முகசுந்தரம்
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது. பிரச்சார வசனங்களை மட்டுமே(!) கேட்டுக் கேட்டு காது புளித்துப்போன மக்கள் பல இடங்களில் அடுத்தகட்ட ‘வரவு’களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துணிந்து தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்த ஜெயலலிதா, உள்ளுக்குள் 800 கோடி ரூபாய் திட்டம் ஒன்றை வைத்திருந்ததாகச் சொல்வார்கள். அந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டதால் தங்களுக்குக் கணிசமான இடங்கள் கிடைக்கலாம் எனக் கணக்குப் போட்டது திமுக. ஜெயலலிதாவும் அதே கணக்கைத்தான் போட்டார் என்றாலும் அவர் கூடுதலாக இன்னொரு பிளானும் வைத்திருந்தார். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக பத்து லட்சம் ஓட்டுகளைக் குறிவைத்து ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம் ‘கவனிப்பது’தான் அந்த பிளான்.
‘100 பேருக்கு காசு கொடுத்தால் அதில் 60 பேராவது அதிமுகவுக்கு ஓட்டுப் போடுவார்கள். அப்படி ஓட்டுப் போட்டால் அனைத்து இடங்களிலும் அதிமுகவுக்கே வெற்றி’ என ஜெயலலிதாவுக்கு அழகாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருந்தார்கள் நவீன அரசியல் சாணக்கியர்கள்.