சீமான்
தேர்தலில் நீங்கள் வரிசையில் நின்று தேர்ந்தெடுக்கப்போவது இந்த நாட்டின் தலைவரை அல்ல, தரகரை. சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டின் தலைவர், முதலாளிகளுக்கும் மக்களுக்கும் இடையே வெறும் தரகராக இருந்து வேலை செய்ய முடியுமே தவிர, தலைவனாக இருந்து சேவை செய்ய முடியாது. இந்தியா சந்தைப் பொருளாதாரத்தைக் கைவிடாத வரையில், மோடி அல்ல, யார் வந்தாலும் இதைத்தான் செய்வார்கள். முதல்வர் பதவி என்பது அகில இந்திய தரகர், பிரதமர் பதவி என்பது அகில உலக தரகர். அவ்வளவுதான் வித்தியாசம்.
இதை மாற்ற காங்கிரஸாலும் முடியாது. இந்தக் கொள்கையை ஆதரிக்காத ஒரே இயக்கமான, தாய்மைப் பொருளாதாரக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிற ‘நாம் தமிழர்’ இயக்கம் ஆள வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்விலும் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசை நிர்மாணிப்பது அரசியல். நமது வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கிற அரசியலை நாம் தீர்மானிக்காமல் யார் தீர்மானிப்பது? இந்த மண்ணின் அரசியலைப் பல தலைவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் நாங்கள். நாங்கள் இப்போது முச்சந்தியில் நின்று கத்துவது போல, இன்னொரு தலைமுறை கத்தக் கூடாது.
இறுதி வாய்ப்பு