மருகும் திமுக... மடக்கும் பாமக!- மத்திய சென்னை மகுடம் யாருக்கு?


கே.கே.மகேஷ்

மாவட்டம் அளவுக்குப் பரந்து விரிந்த நாடாளுமன்றத் தொகுதி களுக்கு  நடுவில், ஒன்றியம் அளவுக்கே உள்ள  சிறிய தொகுதி மத்திய சென்னை.

கொஞ்சம் வேகமாக வாக்கிங் போனாலே, கடந்துவிடக்கூடிய அந்தத்தொகுதிக்கு நாம் போன ஆட்டோ டிரைவரே சொல்லிவிட்டார் “தயாநிதிமாறன்தான் ஜெயிப்பார்” என்று. ஆனால், களத்தில் இறங்கி விசாரித்தால் நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது.

முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் வாக்குக் கேட்டு வருகிறார் என்ற எண்ணமே மக்களிடம் இல்லை. மாறாக, ஒரு தொழில் அதிபர் முதலீடு செய்யவருகிறார் என்ற பார்வையே மக்கள் மத்தியில் இருக்கிறது. இவரை எதிர்த்து நிற்கும் பாமகவின் சாம் பால், மக்கள் நீதி மய்யம் கமீலா நாசர், நாம் தமிழர் கார்த்திகேயன் ஆகியோர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் எதிர்ப்பும் இல்லை.

x