மச்சான் பேச்சு கசாயம் மாதிரி... கசக்கத்தான் செய்யும்!- சிலிர்க்க வைக்கும் சீமானின் மச்சான்...


எம்.சோபியா

“இவ்வளவு பெரிய நாட்ல நம்மை ஆள்வதற்கு ஆளே கிடைக்கலியா... முதல்வர் என்றாலே கருணாநிதி வீட்டுக்குள்ள போய்த்தான் ஆள்தேடணுமா?” என்று தொடங்கி திமுக,அதிமுக, பாமக என அத்தனை கட்சிகளின் குடும்ப அரசியலையும் துவைத்துத் தொங்கவிட்டவர் சீமான். இப்போது தனது மைத்துனரையே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைத் திருமணம் செய்துள்ள சீமான், கயல்விழியின் அண்ணன் அருள்மொழித்தேவனை விருதுநகர் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு, யார் தமிழர், யாரெல்லாம் தமிழர் என்று சான்றளிக்கும் நாம் தமிழர் கட்சிக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறார்கள் இணையவாசிகள். காளிமுத்துவின் இரண்டாவது மனைவி தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர். அவரது மகன் மட்டும் தமிழரா என்றும் சிலர் சீமானை சீண்டுகிறார்கள்.

தமிழ்நாடே  “அண்ணன்” என்றழைக்கும் சீமானை,  “மச்சான்” என்றழைக்கும் ஒரே வேட்பாளரான அருள்மொழித்தேவனுடன் உரையாடியதில் இருந்து...

x