பணம் கொடுத்து சிக்கினால் 6 வருஷம் ஓட்டுப்போட முடியாது!- 6 வருஷம் ஓட்டுப்போட முடியாது!


கா.சு.வேலாயுதன்

வேட்பாளர்கள் தராமல் விட்டாலும் வாக்காளர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறது.  ‘ஓட்டுக்குப் பணம்’ என்ற போதையை அரசியல் கட்சிகள் மக்கள் மனங்களில் அந்த அளவுக்குப் புகுத்திவிட்டார்கள்!

 “பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் மீதான குற்றம் நிரூபணமாகி அபராதம் விதிக்கப்பட்டால், அவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடமுடியாது; வாக்களிக்கவும் முடியாது என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். சட்டம் என்னவோ நல்லாதான் இருக்கு. ஆனா, இவ்வளவு பணம் புழங்கியும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?” என்று கேள்வி எழுப்புகிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்  எம்.லோகநாதன்.

‘‘2009 ஆகஸ்ட்டில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல். அப்ப கொமுக பொறுப்பில் இருந்த நான் தேர்தல் வேலைகளைச் செஞ்சேன். அந்தச் சமயத்துல, பெரம்பலூர்காரங்க காந்தி மாநகர்ல ஓட்டுக்காகப் பணம் கொடுத்தாங்க. அவங்கள முப்பதாயிரம் ரூபாய் ரொக்கத் தோட கையும் மெய்யுமா பிடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சோம். வழக்கும் போட்டாங்க. ஆனா, தேர்தலோட அந்த வழக்கையும் மறந்துட்டாங்க. ஒரு வருசம் கழிச்சு, அந்த வழக்கோட நிலை என்னனு ஆர்டிஐ-யில் கேட்டேன். அதுக்கப்புறம்தான் சிலரைப் பிடிச்சு கோர்ட்ல நிறுத்துச்சு போலீஸ். அதுல ஒருத்தருக்கு கோர்ட் ரெண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சுது. அவரும் அதைக் கட்டிட்டுப் போயிட்டாரு.

x