ஜாலியன்வாலா பாக்- ஒரு ரத்த வரலாற்றின் நூற்றாண்டு


ஆசை

பஞ்சாபின் புகழ்பெற்ற அமிர்தசரஸ் தங்கக் கோயிலிலிருந்து ஆறு நிமிட நடையில், 550 மீட்டர் தொலைவில் ஜாலியன்வாலா பாக் இருக்கிறது என்று காட்டுகிறது கூகுள் மேப்ஸ். இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஜாலியன்வாலா பாக் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று கூகுள் மேப்ஸ் காட்டிவிடும். ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒவ்வொரு தொலைவு. எனினும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை அதன் மையப் பகுதியில் இருப்பது ஜாலியன்வாலா பாக்.

‘ஜாலா என்ற ஊரிலிருந்து வந்தவர்களுக்குச் சொந்தமான தோட்டம்’ என்பதுதான் ‘ஜாலியன்வாலா பாக்’ என்ற பெயருக்கு அர்த்தம். சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தத் தோட்டம் இன்று ரத்தக் கறையுடன் இந்திய வரலாற்றுக்குச் சொந்தமாகிவிட்டது.

முன்  வரலாறு

x