மீண்டும் பொன்னார்... மிரட்டும் வசந்தகுமார்!- கன்னியாகுமரி கள நிலவரம்...


என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்த எச்.வசந்தகுமாரைக் களமிறக்கி இருக்கிறது காங்கிரஸ். இதனால் கன்னியாகுமரி தேர்தல் களம் வேனலைத் தாண்டி தகிக்கிறது!

கடந்தமுறை தனித்து நின்ற காங்கிரஸுக்காக களமிறங்க சீனியர் தலைவர்கள் பலரும் பயந்த நிலையில், துணிந்து போட்டியிட்ட வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்றார். அந்த ரிசல்ட் தான் இந்தத் தேர்தலில் அவருக்கான சீட்டையும், பாஜகவினருக்கு வேகமான ஓட்டத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்தத் தொகுதியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் சார்ந்த கட்சிதான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அரசியல்வாதிகள் நம்பும் சென்டிமென்ட். இதை நம்பி, பாஜகவும் காங்கிரஸும் இங்கே முழு பலத்துடன் மோதுகின்றன. கடந்த தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் காலியானது. 37 தொகுதிகளில் வாகை சூடிய அதிமுக, இங்கு மட்டும் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. அதே சமயம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி போட்டு ஆளுக்கு மூன்று தொகுதிகளை அள்ளின. அதிமுகவுக்கு ஒரு இடத்திலும் வெற்றியில்லை.

x