சமூக ஊடகங்களில் சக்கைப்போடு போடும் பெண் வேட்பாளர்கள்!


கரு.முத்து

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் வேட்பாளர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி அந்தஸ்தைக் கூட்டுவதிலும், சில்லறைத் தனங்களைச் சொல்லி சீரைக்கெடுப்பதிலும் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி, தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரின் சமூக ஊடக பிரச்சாரங்கள் தேசம் கடந்து பேசுபொருளாகி, வைரலாகி வருகின்றன.

வேட்பாளர் தேர்வில் திமுகவில் வாரிசுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு அத்தனை அழகாக பதில் சொல்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாட்ஸ் -அப் பதிவானது அவர் பக்கத்து நியாயத்தை உரக்கச் சொன்னது.

x