வழக்குகள் இருப்பதால் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது- முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பேட்டி


ஆர்.ஷபிமுன்னா

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாமல் வைத்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால், வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி இடைத்தேர்தலை நீண்ட காலத்துக்கு நடத்தாமல் இருக்க முடியாது என்கிறார் முன்னாள் மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி. இது குறித்து காமதேனு இதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

 கடந்த 2014 மக்களவைத் தேர்தல் மார்ச் 5–ல் அறிவிக்கப்பட்டு மே 20–ல் முடிந்துவிட்டது. ஆனால், இந்த முறை தாமதப்படுத்தி இருப்பது சரிதானா?

கோடை மற்றும் மழைக் காலங்களைக் கணக்கில் கொண்டு மக்களவைத் தேர்தல் இன்னும் சற்று முன்னதாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தாமதப்படுத்தியதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க வேண்டும். அதேசமயம், மதுரை சித்திரை திருவிழா போல பிரசித்தி பெற்ற உள்ளூர் திருவிழாக்கள் பற்றியும் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்தல் தேதியை முடிவு செய்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. ஆணையம் நினைத்தால் மதுரைக்கு மட்டும் இன்னொரு நாளில் தேர்தலை நடத்தலாம்.

x