நூரு வந்தார்... நூரு வந்தார் கட்டை வண்டியிலே!


கா.சு.வேலாயுதன்

தேர்தல் திருவிழாவுக்குத் தேதி குறித்துவிட்டால் சுயேச்சைகள் பண்ணும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அப்படித்தான் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட நூர் முகம்மது என்ற சுயேச்சை, மாட்டு வண்டியில் மனு தாக்கல் செய்ய வருவதாகத் தகவல் வந்தது. 28 தேர்தல்களில் களம் கண்ட வேங்கையான அவருக்காக மீடியாக்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் வசந்தகுமார் என்ற இன்னொரு சுயேச்சை ஊடாடினார்.

மனைவி சகிதம் மனு தாக்கல் செய்ய வந்திருந்த மனுஷன், “மனுவைத் தாக்கல் பண்ணிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்” என்று மீடியாக்களிடம் மினிஸ்டர் ரேஞ்சுக்கு சொல்லிவிட்டு உள்ளே போனார். உடனே அட்டென்ஷன் ஆன போலீஸார், வசந்தகுமார் பேட்டியளிப்பதற்காக தடுப்புகளை வைத்து மேடை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல... ஏகப்பட்ட மீடியா மைக்குகள் சகிதம் மீடியா மக்கள் வசந்தகுமாரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்... காத்திருந்தார்கள்... காத்துக்கொண்டே இருந்தார்கள். மணி பதினொன் றரையைத் தாண்டியும் ஆள் வரவில்லை. அவரது அலைபேசி எண்ணை வைத்திருந்தவர்கள் போனைப் போட்டு, “உங்களுக்காக எல்லாரும் காத்துருக்கோம். குயிக்கா வாங்க” என்று அவசரப்படுத்தினார்கள்.

x