மலையாள தேசத்தில் மகுடம் யாருக்கு?- மும்முனைப் போட்டியில் மூச்சுத்திணறும் கேரளம்!


என்.சுவாமிநாதன்

காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் மட்டுமே மாறி மாறி வெற்றிக்கொடி நாட்டி வரும் கேரளத்தில் இந்த முறை பாஜகவும் பங்குக்கு வருகிறது. காரணம், சபரிமலை விவகாரம்!

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து 1000 நாள்கள் கடந்துவிட்டன. இதனிடையில், வரலாறு காணாத வெள்ளச் சேதத்தை எதிர்கொண்டது கேரளம். ஆனாலும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு சிறப்பாகவும் துரிதமாகவும் செயலாற்றி மக்களிடம் நற்பெயரை பெற்றது. ஆனால், அடுத்துவந்த சபரிமலை விவகாரம் இடதுசாரி அரசுக்குப் பெரும் தலைவலியாகிப் போனது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் மார்க்சிஸ்ட் அரசு அதிக அக்கறை காட்டியது. இதை எதிர்த்து பாஜகவும் காங்கிரஸும் தனித்தனியாகப் போராட்டங்களை முன்னெடுத்தன. மாநில அரசின் நடவடிக்கை மார்க்சிய சிந்தனையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும் தீவிர இந்துத்துவவாதிகளிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனிடையே, காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், சரத்லால் ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட இந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பீதாம்பரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

x